அரசாங்கம் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர்கள் எவரையும் களமிறக்காததன் பின்னனி,புலப்படுத்தும் உண்மைகள் தான் என்ன.?
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_109.html
இன்னும் சில நாட்களில் ஊவா மாகாண மக்கள் மாகாண சபைத் தேர்தல் ஒன்றை எதிர் நோக்க உள்ளார்கள் . இத் தேர்தலின் விளைவுகளின் எதிரொலி எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் கனிசமன அளவு செல்வாக்கு செலுத்த உள்ளதால் அனைத்து தரப்பினரும் தங்கள் வாக்கு வங்கிகளை என்ன விலை? கொடுத்தாவது நிரப்பிக் கொள்ள அதிக பிரயத்தனம் செய்து வருகிறார்கள்.
பதுளை மாவட்டத்தில் கனிசமான அளவு முஸ்லிம்களின் வாக்குகள் இருப்பதால்,தங்கள் வெற்றிகளை உறுதிப்படுத்த அராசாங்க எதிர் கட்சிகள் பெரும்பாண்மை இன சில குழுக்களால் தொடர்ந்து வரும் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புனர்வுச் செயல்களை தாறக மந்திரமாய்க் கொண்டு முஸ்லிம்களின் வாக்குகளின் மீது தங்கள் கழுகுப் பார்வையை செலுத்தி இருக்கின்ற போதும்,பதுளையில் அரசாங்கம் முஸ்லிம் வேட்பாளர்கள் எவரையும் களமிறக்காது "அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் வாக்களிக்க தயார் அல்ல,நாம் ஏன் முஸ்லிம்களிடம் சென்று நேர வீண் விரயம் செய்ய வேண்டும் ?" என்பதை தெளிவாக தங்கள் செயற்பாடுகள் மூலம் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர்.
ஒரு கட்சி மக்களிடையே அதீத செல்வாக்குடையதாக காணப்படும் பட்சத்தில் தாங்கள் களமிறக்கும் வேட்பாளர்களினுள்ளேயே தங்கள் வாக்குளை பிரித்துக்கொள்ளும்.அங்கே வேட்பாளர் எண்ணிக்கை அதிகம் செல்வாக்கு செலுத்தாது .எனவே, அரசாங்கம் பேரின மக்களிடையே அதீத செல்வாக்குடையதாக காணப்படும் பட்சத்தில் முஸ்லிம்களின் சிறு வாக்கு வங்கியை கவனத்திற்கொண்டு ஓரிரு முஸ்லிம்களை களமிறக்கி தனது வாக்கு வங்கியை சிறிது அதிகரிக்க முயற்சித்திருக்கும்.
ஆனால்,இத் தேர்தலில் அரசு முஸ்லிம்களிட்கு ஆசனம் எதனையும் வழங்காது புறக்கனித்திருப்பதானது பேரின மக்களிடையே அரசாங்கம் வேட்பாளரை களமிறக்கி,குறித்த வேட்பாளர் மூலம் தங்கள் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை தெளிவாக எம்மால் அறிந்து கொள்ள இயலுமாக உள்ளது.
அதாவது,முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்கி அரசாங்கம் முஸ்லிம்களிடையே பெற இயலுமான வாக்கை விட அவ்விடத்திற்கு பேரினத்தை சேர்ந்த ஒருவரை களமிறக்குவதன் மூலம் அரசாங்கம் பெறப்போகும் வாக்கானது விஞ்சும் போதே முஸ்லிம் வேட்பாளரை அரசு புறக்கணித்திருக்கும்.
அரசாங்கமானது வேட்பாளரின் தேவையை உணர்ந்திருப்பதானது பேரின மக்களிடையே தங்கள் செல்வாக்கு மிகையாக உடைந்துள்ளதையே எடுத்துக்காட்டுகிறது.
அரசாங்கத்தின் இச் செயற்பாட்டின் மூலம் அரசாங்கமானது சிறுபான்மை மக்களிடையே தங்கள் ஆதரவை வெகுவாக இழந்து நிற்பதும்,பெரும்பான்மை மக்களிடையே படிப்படியாக இழந்து வருவதையும் எமக்கு தெளிவாக சுட்டி நிற்கிறது.
இதே நிலைமை தொடர்ந்தால்? அரசாங்கத்தின் எதிர் காலம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.