சம்மாந்துறையில் தொடரும் யானைகளின் அட்டகாசத்திற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்கும்...??
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_165.html
சம்மாந்துறை ஊரானது வயல் நிலங்களால் சூழப்பட்டு அமையபெற்றிருக்கும் ஓர் ஊர் என்றால் மிகையாகாது என்றே கூற வேண்டும்.சம்மாந்துறையில் வயல் வேலைகள் ஆரம்பித்தவுடன் வேளாண்மைகளை யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் யானைகளைத் தடுப்பதற்காக வேண்டி வயல் அறுவடைகள் முடியும் வரை சிலர் பொறுப்பாக நியமிக்கப்படும் தற்காலிக யானைத் தடுப்பு வழி முறை தான் பல வருடங்களாக சம்மாந்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக இவ்வாறு நியமிக்கப்படுவோரால் யானைக்கடவைகளினால் உள் நுளையும் யானைகளை மாத்திரமே தடுக்க இயலும்.பல தடவை இவர்களை விஞ்சி யானைகள் உள் நுளைந்து தங்கள் அட்டகாசங்களை வயல் நிலங்கள் உட்பட பல இடங்களில் அரங்கேற்றிச் சென்றுள்ளன.
வயல் அறுவடைகளின் பின்னர் யானைகளை சம்மந்துறையினுள் வராது தடுப்பதற்கு எது வித தடைகளும் இல்லை.இதன் விளைவாக சம்மாந்துறை ஊரினுள் அடிக்கடி யானைகளின் ஊடுருவல்களும்,அதனால் சில அசம்பாவித சம்பவங்களும் அடிக்கடி பதியப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்றும் சம்மாந்துறை நகர் பள்ளி வாயலை அண்டிய பிரதேசத்தில் யானைகள் தங்கள் அட்டகாசத்தை அரங்கேற்றி உள்ளன.இக் குறித்த இடத்தில் சில மாதங்கள் முன்பும் யானைகள் கடைகள்,சம்மாந்துறை தேசிய பாடசாலையின் சிற்றுண்டி சாலை அமைந்துள்ள இடத்திலுள்ள சுவர் போன்றவற்றை உடைத்து தங்கள் அட்டகாசத்தை அரங்கேற்றி இருந்தன.
இக் காலங்களில் நெயினாகாடு,மல்கம்பிட்டி,கை காட்டி, வளத்தாப்பிட்டி,மல்யதீவு,மல்வத்தை,மஜீத்புரம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள்,வீடுகள், கைத் தொழில் இடங்கள் யானைகளின் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையில் உள்ளது.
ஏன்?
அம்பாறை-கல்முனை பிரதான வீதியின் வளத்தாப்பிட்டி தொடக்கம் காரைதீவு வரையான பல இடங்களில் யானைகளின் அச்சுறுத்தலால் இரவு நேரப் போக்குவரத்து கூட அதிகம் கேள்விக்குள்ளாகி உள்ளது.
எனவே,யானைகளின் உள் நுளைவை சம்மந்துறையினுள் தடுப்பதற்கான நிலையானதொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என சம்மாந்துறை மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
நிறை வேருமா?
நிறைவேற்றுபவர் யார்?