ஞானசாரவுக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள்?

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_198.html

அளுத்கம விவகாரத்தைத் தொடர்ந்து ஜனாதிபதியின் அனுமதியுடனேயே ஞானசாரவிடம் 1 கோடி நஷட ஈடு கோரி அமைச்சர் ராஜித வழக்குத் தொடர்ந்துள்ளதாக அறிவித்துள்ளமையானது ஏற்கனவே ஞானசாரவின் கொடுஞ்சொற்களுக்குள்ளான அமைச்சர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டியிருப்பதாகவும் எனவே அனைவரும் ஓரணியில் திரள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே அமைச்சர் ரிசாத் பதியுதீன் 500 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்ததோடு அமைச்சர் டிலான் பெரேராவும் பகிரங்கமாக ஞானசாரவுக்கு சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.