சிங்கள மன்னர்களின் பாதுகாப்புக்கே வீதியோரங்களில் முஸ்லிம்களைக் குடியமர்த்தினர் – ரணில்

SAMSUNG CSCஒல்லாந்தர், போத்துக்கேயர்  காலத்திலும் சிங்கள மன்னர்களைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்களே முன்னின்றுள்ளார்கள். அதற்காகத்தான் கண்டிக்குச் செல்லும் வீதிகளில் இடை  இடையே முஸ்லீம்களை பண்டைய கால சிங்கள மன்னர்கள் குடியமர்த்தினார்கள் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
முன்னாள் போக்குவரத்து இராஜங்க அமைச்சர் யூ.எல்.எம் பாருக்கின் 50 வருட கால அரசியல் வாழ்வும்  “யூக  பெரலின் துங்கோரல அபிமானய” என்ற  நூலும் நேற்று  பி.எம். ஐ.சி.எச்.ல் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்ச,  எதிர் கட்சித் தலைவர்  ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்  இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்,  நீதியமைச்சர்  ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
போத்க்கேயர், ஒல்லாந்தர்  வெள்ளையர்களுடன் சேர்ந்து போராடியவர்களும் சிங்கள மன்னர்களுக்குப் பாதுகாப்பாளர்களாக இருந்ததும் ஆரம்பகால முஸ்லிம்களேயாகும்.
இந்த நாட்டில் பௌத்தர்கள் மட்டும்தான் வாழ வேண்டும். ஏனையவர்கள் வாழக்கூடாது என சிந்திக்க முடியாது. இந்த நாட்டில் அன்று இருந்தது போன்று சிறுபான்மையினர்களது மதம், கலை, கலாச்சாரம் போன்ற சகல விழுமியங்களை அனுபவிப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் பிரபகரன் தோற்றம் பெற்றதானலேயே மொழிப் பிரச்சினை ஏற்பட்டது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். 

Related

உள் நாடு 5217877001502767857

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item