சவூதி அரசின் அதிரடி..

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_993.html
ஏற்கனவே, இருக்கும் ஆண் பணியாளர்களை மாற்றி பெண் பணியாளர்களை நியமிக்க போதிய கால அவகாசம் தேவை என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலித்த அரசு, அவகாசம் அளித்தது. பல கடைகளில் பணியாற்றி வந்த ஆண்களுக்கு பதில் பெண்கள் நியமிக்கப்பட்டனர்.
இதற்கான கால அவகாசம் முடிவடைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, சவுதியின் ஜெட்டா நகரில் உள்ள உள்ளாடை கடைகளை நேற்று சோதனையிட்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் பெண் பணியாளர்களை நியமிக்காமல், ஆண் பணியாளர்களை வைத்து மட்டுமே வியாபாரம் செய்து வந்த 20 கடைகளை பூட்டி சீல் வைத்துள்ளனர்.