இயந்திரக் கோளாறு காரணமாக நடுவீதியில் பஸ் விபத்து - படங்கள்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_808.html
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்னால் பஸ் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் 10.08.2014 அன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான குறித்த பஸ்ஸில், 30 பேர் பயணித்துள்ளதாகவும் இவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லையெனவும் பொலிஸார் மேலும் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.