காணாமல் போனோர் விவகாரம்- இன்று மன்னாரில் விசாரனை

காணாமல் போனோர்  விவகாரம் தொடர்பிலான 6 ஆம் சுற்று விசாரணைகள் இன்று மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை இங்கு விசாரணைகள் நடைபெறும் என இதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2013 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக் குழுவுக்கு, இதுவரையில் 18,789 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றுள் 5000 முறைப்பாடுகள் காணாமல் போன படைவீரர்களின் உறவினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியுள்ளது.
ஆணைக்குழுவின் கால எல்லை 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related

உள் நாடு 2876243007445544313

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item