காதல் சின்னம் நினைவுச் சின்னமாகிவிடும்… ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் 68 ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து வார இறுதி நாள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்க்க அக்கம்பக்கத்து மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சென்று குவிந்துள்ளனர்.
இரு நாட்களில் சுமார் 3 இலட்சம் பயணிகள் அங்கு சென்று குவிந்தனர். இதனால் தாஜ்மகாலில் அழுத்தம் ஏற்பட்டு அதன் மார்பிள் தரைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகியது.
இதே நிலை நீடித்தால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் சேதமடைய வாய்ப்புள்ளதாக  கட்டிடக் கலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.வரலாற்று ஆய்வாளர் நாத், இதுபற்றி கூறுகையில்,
தாஜ்மஹாலின் அடித்தளம் எப்படி இருக்கிறது என்று பல ஆண்டுகளாக சோதிட்டு பார்க்கவில்லை. யமுனை நதியில் தண்ணீர் குறைவாக உள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தாஜ்மஹாலின் அடித்தளத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுதவிர அதிகப்படியான கூட்டம் வந்தால் கட்டிடத்தைத் தொட்டுப் பார்க்கவும் வாய்ப்பு அதிகம். இதனால் கட்டிடத்தில் கீறல்கள் விழும் வாய்ப்புள்ளது. தாஜ்மஹால் சற்று இளைப்பாற நேரம் கொடுக்க வேண்டும். ஆனால் பகலிலும் போதாது என்று மாதத்தில் நான்கு நாட்கள் இரவிலும் தாஜ்மஹாலைப் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது,

Related

சர்வதேசம் 9198104548765339412

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item