மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றிக் கொண்டாட்டத்தால் மகிந்த ராஜபக்ஷவை கேவலப்படுத்துவது முறை அல்ல.

சம்மாந்துறை அன்சார்

முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத காடையர்களின் விடயத்தில் அவர் தகுந்த நடவடிக்கை எடுக்காததை எந்த முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள மாட்டான், நானும் அப்படியே.

ஆனால் இந்த நாட்டினுடைய தேசிய பாதுகாப்பு விடயத்தில் அவர் பெரும் பங்காற்றியிருக்கின்றார், பல வருட கால கோர யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கின்றோம், யுத்தத்தால் முஸ்லிம்களாகிய நாம் இழந்தது பற்றி நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றல்ல. முன்னொரு காலத்தில் நமது அடையாள அட்டை இல்லாது எதிரே உள்ள கடைக்குச் செல்வதாக இருந்தாலும் அஞ்சுவோம் அந்த அச்சம் இப்போது இல்லை மாறாக நமது பிள்ளைகுட்டி, குடும்பத்தோடு யாழ்பாணம் வரைக்கும் இன்று நாம் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றோம் அதற்கு வழிசமைத்தவர் எமது முன்னால் ஜனாதிபதி என்பதை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

யுத்தத்தை வெற்றி கொண்டவகையில் நாம் மகிந்த ராஜபக்ஷவை மதிக்கின்றோம் என்று புதிய அரசாங்கத்தில் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவும் கூறியிருந்தார்கள்.

முஸ்லிம் சமூகமாகிய நான் - நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்த வெற்றி இறைவனின் உதவியால் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம் ஆனால் அந்த வெற்றியால் பெரும்பான்மை சமூகத்தவர்களிடமிருந்து நாம் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளக் கூடாது காரணம் பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பான்மையினர் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின்றார்கள் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கது.

நமது நாட்டில் பல முஸ்லிம் ஊர்களில் நம் இளைஞர்கள் நடைமுறைப்படுத்தும் வெற்றிக் கொண்டாட்டங்கள் உண்மையில் ஆரோக்கியமானதாக இல்லை. பால் சோறு சமைத்து கொண்டாடுகிறார்கள், பட்டாசுவெடித்து, ஆடல், பாடல் என கொண்டாடுகிறார்கள். ஏதோ சனியன் ஒழிந்து விட்டான் என்ற எண்ணப்பாட்டையே இவர்களது கொண்டாட்டகள் பிரதிபலிக்கின்றன.

இளைஞர்கள்தான் ஆர்வக் கோளாரில் மைத்திரியின் வெற்றியை அதிகமாக கொண்டாடுகிறார்கள் என்றால் அரசியல்வாதிகளின் புத்தி எங்கே செல்கிறது...??? பேரணி என்றும், ஊர்வலம் என்றும், மாலையும், கழுத்துமாக வீதி உலாச் செல்கிறார்கள் இவைகள் அனைத்தும் சிங்கள பெருன்பான்மை மக்களுக்கு ஆத்திரங்களையே உண்டு பண்னும்.

பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருக்கும் இவ்வாறான அரசியல்வாதிகள் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா...??? சிங்கள பெரும்பான்மை சமூகத்தோடு ஒன்றினைந்து வாழும் எம் முஸ்லிம் சகோதரர்களைப் பற்றி சிந்திக்க வேண்டாமா..??? எமது கூத்தும் கும்மாளமும் சிங்களவர்களோடு வாழும் எம் சகோதர்களையே பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆகவே சகோதரர்களே...!!! முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது சேறு பூசும்படியாக எமது கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்ளாமல், பெறும்பான்மை சமூகத்தோடு மேலும் மேலும் நற்புறவோடு இருக்க முனைந்து கொள்ள வேண்டும் மேலும் அரசியல்வாதிகளும் சரி, பொதுமக்களும் சரி, இளைஞர்களும் சரி ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றியை கொஞ்சம் ஆரோக்கியமானதாக கொண்டாடுவோம். நாம் எதிர்பார்த்த வெற்றியை தந்தமைக்காக இறைவனுக்கு மாத்திரம் நன்றி கூறுவோம்.

Related

Articles 2226632089559252771

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item