கத்தி தீட்டப்படுகிறது - கவனம்

ஆரம்ப காலத்தில் இந்நாட்டில் ஏனைய மதத்தவர்களிடையே எழும் பிணக்குககளை தீர்த்துவைக்கும் ஒரு குழுவினராக செயற்பட்டு வந்தனர் இது வரலாறு!

சொல்லும் உண்மை, வர்த்தகத்திலும் அரசியல் துறையிலும் சிறந்தவிளங்கிய எமது இலங்கை முஸ்லிம்கள் எத்துறையிலும் சாதனை படைக்கும் ஒரு சாதியினராக இருந்து வந்திருப்பதற்கான அனைத்து சான்றுகளும் உள்ளது. 2013 ஆண்டு ஒரு இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு கறுப்பு ஆண்டு என்று குறிப்பிடலாம் காரணம் இந்த ஆண்டில் 20க்கும் அதிகமான பள்ளிவாசல் தாக்குதல்கள், இங்கை பணிப்பெண்ணான மர்ஹூமா றிசானாவின் தூக்கு தண்டனை, ஹலால் சான்றிதழுக்கு எதிரான போர்கொடிகள், முஸ்லிம்களின் நில அபகரிப்புக்கள் குர்பானுக்கான சட்டக்கோவைகள் என்று இலங்கை முஸ்லிம்களை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளிய ஒரு ஆண்டினை கறுப்பு ஆண்டு என்று சொல்லதில் எந்தவித பிழையுமில்லை எனலாம்.
  
இந்த அசம்பாவித சம்பவங்கள் இரண்டாயிரத்து பதின்மூன்றோடு முற்றுப்பெறவில்லை 2014 இலும் தொடர்ந்தது, வேறுபட்ட விதத்தில் முஸ்லிம்களை இலக்குவைத்த பேரினவாத குழுக்கள் வெறுமனே பள்ளிஉடைப்புகள், போராட்டங்கள் என்று நடாத்துவதை விட்டு விட்டு இலங்கை முஸ்லிம்களுக்குள் இருக்கும் குழுக்கள் அதாவது மத்ஹபு குழுக்கள், அமைப்புக்கள், மதரஜாக்கள், பள்ளிவாசல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பற்றி ஆராய ஆரம்பித்தது, இதற்கு உதாரணமாக சொல்லக்கூடிய விடயம் ‘மாவனல்லையில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் கூட்டத்தில் அவ்வமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இலங்கை தௌஹீத் ஜமாத்தினர் பற்றி தெளிவாக கூறியமை’ ஒரு சான்றாக கொள்ளலாம்.

தௌஹீத் மட்டுமின்றி இலங்கை முஸ்லிம்களிடத்தில் காணப்படும் அனைத்து பிரிவினர் பற்றியும் அறிந்து வைத்திருக்கும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்களின் அறிவுரீதியான பொறிமுறைக்குள் முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ள பிரதான காரணம் நாம் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்திருப்பதும் பண்படாதிருப்பதுமே.

இவைகள் ஒரு புறமிருக்க புதிய வகையில் முஸ்லிம்களை கட்டுப்படுத்த அல்லது கட்டம்கட்ட தீர்மானித்த சூத்திரதாரிகள் இந்தியாவினை பிரதான காரணியாக காட்டி புதிய இலக்கினை தொடர்ந்தது, அண்மையில் பங்களாதேசில் தூக்கிலடப்பட்ட முல்லா பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள், முல்லா ஒரு சிந்த ஆத்மீகவாதி ஜமாஅதே இஸ்லாமிய அமைப்பிற்கு பெரிதும் உதவிய ஒரு தாயி அது மாத்திரமின்றி இஸ்லமியத்துக்காக பாடுபட்டவர் எனவாம் இது உலகறிந்த விடயம். இலங்கையில் ஜமாஅதே இஸ்லாமி அமைப்பு கடந்த ஒரு தசாப்த காலமாக செயற்பட்டுவருவதும் தெரிந்தவிடயமே ஆனால் இந்த அமைப்பு எந்தவொரு போராட்டங்களையோ அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் இதுவரைக்கும் செய்யவில்லை.
  
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இலங்கையின் ஆங்கில நாளிதழ்களான ‘டெய்லிமிரர்’ மற்றும் த ஐலன்ட் ஆகிய பத்திரிகைகள் இலங்கையில் இருக்கும் இந்திய தூதரத்திற்கும், இந்திய துணைத்தூதுவராலயங்களுக்கும் இலங்கையில் இருக்கும் ஆயுதமேந்திய முஸ்லிம் குழுக்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சுவதாக வெளிவிகார அமைச்சை சாடி செய்தியொன்றை ‘முஸ்லிம் ஆயுத குழுக்கள்’ என்று இலங்கை முஸ்லிம்களை கேவலப்டுத்தி பிரசுரித்திருந்தது அனைவரும் அறிந்ததே. இதில் முக்கியம் என்னவென்றால் இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சிங்ஹா இதனை மறுத்திருந்தது. இருப்பினும் இந்திய ஊடகங்களிலும் குறிப்பாக தமிழ ஊடகங்களிலும் இது பற்றிய செய்தியே அறியாமல் இருந்தது. ஆனால் இப்படி ஒரு செய்தியினை இந்திய அரசு வெளியிட்டிருந்தால் தமிழக ஊடகங்கள் தூக்கிப்பிடித்திருக்கும்.
  
அதுவும் இல்லை யார் இதனை சொன்னார்கள் யார் இதனை ஊர்ஜிதம் செய்தார்கள், யார் பிரசுரிக்க சொன்னார்கள் என்பதில்தான் புதிய இலக்கு வேரூன்றுகிறது.
  
இது புதுவிதமான பொறிமுறை, எதிர்காலத்தில் தாக்குவதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு திட்டம் தீட்டுகின்ற புதிய நுட்பத்தினை கையாளும் சிலர் சில சமயத்தில் சமாதானத்தை குழப்புவதற்கும் அஞ்சுவதில்லை, இலங்கையில் ஒரு கொடிய யுத்தம் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் சிறுபான்மை சமூகத்தினை ஆயுதம் தாங்கும் குழுக்கள் என்று சித்தரிப்பது, இனவாத அரசியலுக்கு கைலாகு செய்வது போன்றாகும், கடந்த

வாரம்கனேடிய நாளிழான ‘டொரன்டோ ஸ்டார்’ பத்திரிகை கூட ஒரு விடயத்தை வெளிச்சம் போட்டு காட்டியது, அதுதான் தமிழர்களின் நிலை இன்று முஸ்லிம்களுக்கு என்று! வெறுமனே பத்திரிகைகளில் வெளியாகும் முன்பக்க செய்திகளை படித்துவிட்டு கசக்கி கை துடைப்பதை விட்டுவிட்டு எதிர்கால எமது முஸ்லிம் சமூகத்திற்கு வைக்கப்படும் ‘பொறி’ யினை தூக்கியெறிய அதில் சிக்காமல் இருக்க இலங்கை முஸ்லிம்கள் என்ன செய்வது என்ற விடயத்தை சிந்திப்போம்.

நவமணியில் பிரசிரமான ஒரு கட்டுரை - விழிப்புக்காக

Related

Articles 1493944197062906920

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item