காதலி, மனைவிகளாலேயே இந்திய வீரர்கள் விளையாடவில்லை : இந்திய கிரிக்கெட் சபை
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_119.html
காதலி மற்றும் மனைவிகளினாலேயே இந்திய வீரர்கள் சரிவர விளையாடவில்லை என இந்திய கிரிக்கெட் வபை தெரிவித்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு விளையாடி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியை தழுவியது.
தோல்வி குறித்து பலரும் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது வீரர்களின் மனைவி மற்றும் காதலிகள் தான் இதற்கு காரணம் என்று இந்திய கிரிக்கெட் சபை புதியதொரு தகவலை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து தொடருக்கு இந்திய அணி செல்லும் போது வீரர்களுடன் மனைவியரும் செல்ல இந்திய கிரிக்கெட் சபை அனுமதி கொடுத்திருந்தது.
ஆனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என இழந்து கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.
இந்திய அணி வீரர்களில் ஆட்டத்திறனை வெளிப்படுத்தாத வீரராக ஹோலி தான் இருந்தார். 10 இன்னிங்ஸ்களில் மொத்தமே 134 ஓட்டங்கள் தான் எடுத்தார். இதில் 2 முறை டக் அவுட் ஆனார்.
ஒரு நாள் போட்டிகள், இருபதுக்கு 20, டெஸ்ட் என நன்றாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வந்த ஹோலி இங்கிலாந்தில் ஆட்டத்திறனை வெளிப்படுத்தாமைக்கு அவரது காதலி அனுஷ்கா சர்மா தான் காரணமாக இருந்துள்ளார்.
விராட் கோஹ்லி தன்னுடன் காதலி அனுஷ்காவையும் அழைத்துச் செல்ல சிறப்பு அனுமதி கோரியிருந்தாராம், இந்திய கிரிக்கெட் சபையும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல அஸ்வின், சட்டேஸ்வர் புஜாரா, முரளி விஜய், ஸ்டூவர்ட் பின்னி, கௌதம் கம்பீர் ஆகியோர் வாரியத்திடம் அனுமதி பெற்று தங்களது மனைவிகளையும் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
இந்த இங்கிலாந்து தொடர் ஒவ்வொருவரையும் விழிப்படைய வைத்துள்ளது. வீரர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்பினால் கூட, அதற்கு அவர்களின் மனைவி மார்கள் இடையூறாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது.
சில வீரர்கள் உடற்பயிற்சி செய்ய போகலாம் அல்லது வலை பயிற்சிக்கு செல்லலாம் என்று நினைத்தாலும் இவர்கள் விடுவதில்லை.
ஊர் சுற்ற போகலாம் என்று அழைத்துள்ளனர். பிறகு எப்படி கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியும்? எனவே இந்த இங்கிலாந்து தொடர் முடிந்ததும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
இதன்படி ஒரு தொடரின் போது வீரர்களுடன் அவர்களின் மனைவிகள் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்கியிருக்க அனுமதிப்பது என்று முடிவு செய்துள்ளோம். காதலிகளுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும் என்றார்.