வாரியபொலவில் யுவதியிடம் அடி வாங்கிய இளைஞன் கைது
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_648.html
வாரியபொல பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு பெண் ஒருவரின் ஆடையை வர்ணித்து கன்னத்தில் அறைந்து, சரமாரியாக தாக்குதலுக்குள்ளான இளைஞன் நேற்று வாரியபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையான வாரியப்பொல பகுதியைச் சேர்ந்த இளைஞனான சு.ஊ.சந்திரகுமார என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பெற்றுகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வாரியப்பொல பகுதியைச் சேர்ந்த இளைஞனான சு.ஊ.சந்திரகுமார, நான் தினசரி கூலிவேலை செய்து பிழைப்பவர், அன்றும் தான் ஒரு வேலையை எதிர்பார்த்து பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த நேரம், இப்பெண், தனது நண்பியுடன் பஸ் தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தார்.
"அப்பெண் மிகவும் இறுக்கமான ஆடை அணிந்திருந்தார்.. நான் அவரிடம், ' மிஸ் இந்த ஆடை உங்களுக்கு பொருந்தவில்லை, நல்லா இல்லை' என்றேன். உடனே அப்பெண் அது உனக்கு தேவையில்லாத விடயம் என்று கூறிவிட்டு வேகமாக பஸ்சில் ஏறினார், நான் பஸ் தரிப்பிடத்தில் நிற்பதைக்கண்டு மீண்டும் இறங்கி வந்து, எனக்கு என்னைப்பற்றி, என் ஆடையை பற்றி சொல்ல நீ யார் என்று கேட்டு, தொடர்ந்து திட்டிக்கொண்டு, கன்னத்தில் அறைய ஆரம்பித்தார். நான் மன்னிப்பு கேட்டும் அவர் தொடர்ந்து தாக்கினார். பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைவது தவறான ஒரு செயல் என்பதால் நான் தலையை குனிந்து நின்றேன்"என்றார்.