மீன்பிடித்துறைமுகமும் நலிவுறும் கல்முனையின் பொருளாதாரமும்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_16.html
மர்ஹூம் M.H.M அஷ்ரப் அவர்களின் கவனத்தில் இந்த விஷயம் ஈர்க்கப்பட்டு, சாய்ந்தமருது முகத்துவாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவரது மறைவுக்குப்பின் அது மரணித்த அம்சமாவே போய்விட்டது. காலாகாலமாக அரசியல் மினிஸ்டர்களையும், எம்பிக்களையும் உள்வாங்கிக்கொண்டிருக்கின்ற இந்த பிரதேசம், ஏன் இதுவரை எந்த அரசியல் பிரமுகர்களாலும் நிவர்த்திசெய்யப்படாமல் அலட்சியம் காட்டப்படுகின்றது என்பது இப்பிரதேச வாழ் மீனவர்ளின் விஷனமாகும்.
இது இப்படியிருக்க, மீன்பிடித்துறைமுக பிரச்சினைக்கு மற்றுமொரு தற்காலிக மாற்றுவழியும் உள்ளது. அதுதான் ( sea walkway ) என்று சொல்லக்கூடிய கடற்கரையிலிருந்து கடலுக்குள் நீட்டியிருக்கும் சுமார் 80 அடி நீளமான பாலம்/நடைபாதை. இந்த வசதி கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு முன்பாகவோ, அல்லது பீச் விளையாட்டு மைதானத்துக்கு முன்பாகவோ அமைப்பதன் மூலம் மீனவர்கள் தங்களது 60 வீதமான தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்பது மீனவர்களின் கருத்தாகும்.
அரசியல் பிரமுகர்கள், மாநகரசபை, மற்றும் சம்மந்தப்பட்டோர் அனைவராலும் இந்த விசயத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமானால், இப்பிரதேச வாழ் மக்களின் வாழ்வாதாரமும், இப்பிரதேசத்தின் பொருளாதாரமும் வளர்ச்சிகானும் எம்பதில் ஐயமில்லை.