ஹமாஸ் வீரமிகு தளபதிகளை இழக்கிறது.

காசா வீடொன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப்பிரிவின் மூன்று சிரேஷ்ட தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு நகரான ரபாஹ்வுக்கு அருகில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட இந்த தாக்கு தலில் மொஹமத் அபு+ 'ம்மலா, மொஹமத் பர்ஹ{ம் மற்றும் ரயீத் அல் அத்தர் ஆகிய மூன்று தலைவர்களுமே கொல்லப்பட்டதாக ஹமாஸ் உறுதி செய்துள்ளது.

காசா மீது இஸ்ரேலின் புதிய கண்மூடித்தனமான தாக்குதல்களில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் இருந்து மேலும் 22 பலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளனர். எனினும் காசா மீதான இராணுவ நடவடிக்கை மேலும் விரிவுபடுத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உறுதி யளித்துள்ளார்.

ரபாஹ் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டு பலரும் காணாமல்போயிருப்பதாக பலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரியான அஷ்ரப் அல் கித்ரா குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலிலேயே ஹமாஸ் இராணுவ தலைமைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது இஸ்ரேல் யுத்த விமானங்கள் நான்கு மாடி கட்டிடத்தின் மீது குறைந்தது 12 ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக சம்பவத் தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 40 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டிருக்கும் அபு+ 'ம்மலா, ஹமாஸ் ஆயுதப்பிரிவான அல் கஸ்ஸாம் படையணியின் தெற்கு காசா பகுதிக்கான கட்டளைத் தளபதியாவார். அதேபோன்று அல் அத்தர், ரபாஹ் மாவட்டத்திற்கான கட்டளைத் தளபதி யாவார். இந்த இருவரும் இஸ்ரேலால் தேடப்பட்டு வந்தோர் பட்டியலில் முக்கியமானவர்களாவர். கடந்த 2006 ஆம் ஆண்டு கிலாத் 'லித் என்ற இஸ்ரேல் இராணுவ வீரரை கடத்தியது உட்பட பல தாக்குதல்களுக்கு மூளை யாக செயற்பட்டவர்களாவர்.

இந்த இருவரது உடல்களும் மீட்கப்பட்டு ரபாஹ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் கஸ்ஸாம் படையணியின் மற்றுமொரு தலைவரான மொஹமத் பர்ஹ{மி உடல் இடிபாடுகளில் இருந்து மீட்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொஹமத் பர்ஹ{ம் ஹமாஸ் பேச்சாளரான பௌஸி பர்ஹ{மின் நெருங்கிய உறவினர் என்பதோடு உள்ளுர் சிரேஷ்ட கட்டளைத்தளபதியாவார்.

"இந்த படுகொலைகள் இஸ்ரேலின் மிகப்பெரிய குற்றச்செயல்களில் ஒன்றாகும். இதன்மூலம் இஸ்ரேலால் எமது குறிக்கோளையோ அல்லது எமது போராட்டத்தையோ பலவீனப்படுத்த முடியாது" என்று குறிப்பிட்ட ஹமாஸ் பேச்சாளர் சமி அபு+ சுஹ்ரி, "இதற்கு இஸ்ரேல் விலை கொடுக்கும்" என்று எச்சரித்தார்.

இதனிடையே n'ய்க் அல் ரத்வான் பகுதியில் உள்ள அடக்கஸ்தலம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் தமது உறவினர்களை அடக்கம்செய்யச் சென்ற நால்வர் கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரி கித்ரா குறிப்பிட்டுள்ளார். புதன்கிழமை இரவு கொல்லப்பட்ட உறவினர்களை அடக்கம் செய்;யச் சென்றவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னதாக காசா நாகரில் கார் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்ட தோடு மூவர் காயமடைந்தனர். அதேபோன்று அல் நஸ்ரியா அகதி முகாமில் மோட்டார் சைக்கிள் ஒன்றை இலக்குவைத்து இஸ்ரேல் இருவரை கொன்றது.

வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய n'ல் தாக்கு தலில் தந்தை மற்றும் 13 வயது மகன் கொல்லப்பட்டனர். பைத் லஹியா பகுதியில் இஸ்ரேல் நேற்று அதிகாலை நடத்திய மற்றுமொரு தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இதன்மூலம் கடந்த ஜ{லை 8 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 2,069 உயர்ந்துள்ளது. 11,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பதோடு அதிலும் சிறுவர்கள் குழந்தை களே அதிகமாக உள்ளனர்.

இதில் கெய்ரோவில் இடம்பெற்றுவந்த இஸ்ரேல்- பலஸ்தீன் மறைமுக அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றிய ளிக்காமல் இரு தினங்களுக்கு முன் யுத்த நிறுத்தம் முறிவடைந்ததை அடுத்து இஸ்ரேலின் தாக்குதல்களில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

மறுபுறத்தில் கஸ்ஸாம் படையணி நேற்று இஸ்ரேலின் பென் குரியோன் விமானநிலையத்தின் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவில் இருந்து தென்கிழக்காக 15 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் விமான நிலையத்தின் மீது எம்-75 ரொக் கெட் கொண்டு தாக்குதல் நடத் தியதாக ஹமாஸ் ஆயுதப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக அனைத்து சர்வதேச விமானசேவைகளும் குறித்த விமானநிலைத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அல் கஸ்ஸாம் படையணி எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து விமான போக்குவரத்து அட்டவணையில் மாற்றங்கள் கொண்டுவரப் பட்டதாக இஸ்ரேல் வானொலி செய்தி வெளியிட்டிருந்தது. யுத்த நிறுத்தம் முறிவடைந்ததன் பின்னர் காசா விலிருந்து இஸ்ரேல் மீது 213 ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணு வம் நேற்று கூறியிருந்தது.

இந்நிலையில் கெய்ரோவில் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை கைவிட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. எகிப்து மத்தியஸ்தத்திலான பேச்சுவார்த் தையில் காசா மீதான இஸ்ரேல் மற்றும் எகிப்தின் முற்றுகையை அகற்றவும் காசா துறைமுகம் மற்றும் விமானநிலை யத்தை மீண்டும் திறக்கவும் ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்தது.

ஆனால் காசாவில் பலஸ்தீன போராளிகள் ஆயுதங்களை களைய இஸ்ரேல் நிபந்தனை விதித்ததால் கெய்ரோ பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்றி ஸ்தம்பிதமடைந்தது.

தலைமைகளைப் படுகொலை செய்வதனால் ஹமாஸின்  போராட்டம் பலவீனப்பட்டு விடும் என்று இஸ்ரேல் நினைத்து விட்டது.  இது வெறும் ஊகம் மாத்திரம் தான் ஏனெனில் இந்த தளபதிகளது பெயர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படி சியோனிஸத்தை எரிக்கும் ஏவுகணைகளது பெயர்களாக மாறும்.

Related

சர்வதேசம் 4721203908952841194

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item