அரசாங்கம் நாட்டை அழித்து வருகின்றது!– அனுரகுமார திஸாநாயக்க

அரசாங்கம் நாட்டை அழித்து வருவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டை சொந்த சொத்தாகவே கருதிச் செயற்படுகின்றது.

உலகில், நாட்டின் வளங்களை மிகவும் மோசமாக கொள்ளையிட்ட அரசாங்கமாக இந்த அரசாங்கம் திகழக்கின்றது.

சசீந்திர ராஜபக்ச இன்று சண்டியராகியுள்ளார்.

முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மக்களுக்கு சேவையாற்றியிருந்தால் ஏன் தேர்தல் சட்டங்களை முழுக்க முழுக்க மீறிச் செயற்பட வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் உதவியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

மக்களை அச்சுறுத்தி ஆயுதங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் தேர்தலை வெற்றி கொள்ள நினைத்தால் ஜே.வி.பி அதற்கு இடமளிக்காது.

பல்வேறு அர்ப்பணிப்புக்களுடன் வளர்க்கப்பட்ட கட்சி எமது கட்சி.

எங்களைக் கிள்ளி விடுவதன் மூலம் அச்சுறுத்தி ஒடுக்கி விட முடியாது.

ஊவா மாகாணத்தில் தேர்தல் சட்டங்கள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை.

தேர்தல் ஆணையாளர் தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு நகைச்சுவை உணர்வை வழங்கி வருகின்றார்.

பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்தவில்லை எனவும், தேவையென்றால் மக்கள் நீதிமன்றின் உதவியை நாடி தேர்தல் சட்டங்களை அமுல்படுத்திக்கொள்ளுமாறும் தேர்தல் ஆணையாளர் பகிரங்கமாக தெரிவிக்கின்றார்.

ஆளும் கட்சியின் முக்கியஸ்தாகள் பதவியை துறக்கத் தயாரில்லை.

ஏனெனில் அவர்கள் பதவி விலகினால் செய்த ஊழல் மோசடிகள் அம்பலப்பட்டு விடும் என்ற பீதியில் உறைந்துள்ளனர்.

இதனால் என்ன விலைகொடுத்தேனும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் ஆளும் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் படல்கும்புர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related

உள் நாடு 1647770990766556853

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item