ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்! இருவர் கைது

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_65.html
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் ஜனாநாயக குடியரசு கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் ஆகியோரை கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களை போன்று குறித்த அலுவலகத்துக்குள் சென்று அங்கு தாக்குலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின பாதுகாப்பு இணையத்தளத்தில் தமிழக முதல்வரை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை கண்டித்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கட்டுரையை பார்த்த பின்னர் தற்கொலைக்கு முயன்ற அண்ணா திராவிட முன்னேற்றக்கழக சேலம் மாவட்ட பெண்கள் அமைப்பு உறுப்பினரான விஜயலட்சுமி ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் தூக்கவில்லைகளை உண்டுகொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.