நீண்ட கால யுத்தம் ஒன்றுக்கு தயாராகுங்கள்- ஹமாஸ் எச்சரிக்கை

காசா-இஸ்ரேல் மோதலை முடிவுக்கு கொண்டுவர கெய்ரோவில் முன்வைக்கப்பட்ட போதிய சலுகைகள் இல்லாத பரிந்துரைகளை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது. ஐந்து நாள் கொண்ட இரு தரப்புக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எகிப்து மத்தியஸ்தத்திலான சமரச பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இன்னும் ஏற்கவில்லை என்று குறிப்பிட்ட இஸ்ரேல், பலஸ்தீன பிரதிநிதிகளுடனான மறைமுக பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம்பெறும் என்று உறுதி யளித்தது.

காசா மீது இஸ்ரேல் மற்றும் எகிப்து முன்னெடுத்துவரும் முற்று கையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் அந்த பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பு, காசாவில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை திறக்கவும் கோருகிறது.

"இஸ்ரேல் பலஸ்தீனர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் அல்லது நீண்ட கால யுத்தம் ஒன் றுக்கு முகம் கொடுக்க வேண்டும்" என்று ஹமாஸ் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஒசாமா ஹம்தான் தனது பேஸ்புக் பக்கத்தின் ஊடே எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த ஜ{லை 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் சுமார் 2000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட் டனர். இதில் அதிக பெரும்பாலான வர்கள் அப்பாவி பொதுமக்களாவர். மறுபுறத்தில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து ரொக்கெட் தாக்குதல்களை நடத்தினர். இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 64 இராணுவத்தினர் மற்றும் மூன்று சிவிலியன்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் காசா மீதான பொருளாதார முற்றுகையை அகற்ற பலஸ்தீன போராளிகள் ஆயுதங்களை களைய வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதிக்கிறது. எனினும் அதனை ஹமாஸ் நிராகரித்து வருகிறது. கெய்ரோவில் இடம் பெறும் சமரச பேச்சு குறித்து கருத்து வெளியிட்ட இஸ்ரேல் அதிகாரி ஒருவர், "முன்வைக்கப்பட்ட எந்த கோரிக்கையையும் இஸ்ரேல் ஏற்கவில்லை" என்றார். "இஸ்ரேலின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் பட்சத்திலேயே (நீண்ட கால) தீர்வொன்றை எட்ட முடியும்" என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய பேச்சுவார்த்தைகளுக்காக சனிக்கிழமை பின்னேரம் இஸ்ரேல் பிரதிநிதிகள் கெய்ரோவை சென்றடைந்ததோடு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானது. பலஸ்தீன தரப்பில் ஹமாஸ் உட்பட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் துருக்கி மற்றும் கட்டார் நாடுகள் ஹமாஸ{க்கு ஆதரவாக பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுத்து வரு கின்றமை குறிப்பிடத் தக்கது. கெய்ரோவில் உள்ள பலஸ்தீன பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அஸ்ஸாம் அல் அஹமத் நீண்ட கால தீர்வொன்று எட்டப்படும் வாய்ப்பு குறித்து நம் பிக்கை வெளியிட்டுள் ளார். "யுத்த நிறுத்த காலம் முடிவதற்கு முன் னர் வெகு விரைவில் உடன்பாடொன்று எட்டப் படும் நம்பிக்கையில் இருக்கின்றோம்" என்று அவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆனால் ஹமாஸ் பேச்சாளர் சமி அபு+ சுஹ்ரி குறிப்பிடும்போது, "ஒன்றிணைந்த பலஸ் தீன தரப்பு முன்வைக்கும் கோரிக் கைகளை இஸ்ரேல் ஏற்காத நிலையில் எம்மால் உடன்பாடொன்றை எட்ட முடியாது. குறிப்பாக காசா மீதான தாக்குதல் மற்றும் முழுமை யான முற்றுகை அகற்றப்படும்வரை அது நடக்காது" என்று சுஹ்ரி குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு தெளிவாக உறுதிப்படுத்தப்படும்வரை கெய்ரோவில் இடம்பெறும் மறைமுக பேச்சு வார்த்தையில் எந்த இணக்கப்பாடும் எட்டப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நேற்று குறிப்பிட்டார். "கெய்ரோவில் இருக்கும் இஸ்ரேல் பிரதி நிதிகள் இஸ்ரேலின் பாதுகாப்பு தேவையை கருத்தில் கொண்டு உறுதியான நிலைப்பாட்டிலேயே செயற்படுகின்றனர்" என்று nஜரூ சலத்தில் நேற்று இடம்பெற்ற இஸ் ரேல் பாதுகாப்பு அமைச்சரவை கூட் டத்தில் நெதன்யாகு குறிப்பிட்டார்.

இந்நிலையில் இஸ்ரேலின் கடும் தாக்குதலுக்கு இலக்கான முற்று கையில் இருக்கும் காசாவில் மனிதாபிமான நெருக்கடி குறித்து பலஸ்தீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பலஸ்தீன சக்தி வலு மற்றும் இயற்கை வள அதி கார சபை நேற்று வெளியிட்ட அறி விப்பில், மக்கள் செறிந்து வாழும் காசாவில் தற்போது நாளொன்றுக்கு ஆறு மணி நேரமே மின்சார விநியோகம் வழங்க முடியுமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இவ் வாறு மேலும் இரண்டு மாதங்க ளுக்கே மின்சாரம் வழங்க வசதி இருப்பதாகவும் எச்சரித்தது. காசா வின் ஒரே மின்சார உற்பத்தி நிலை யம் மீது இஸ்ரேல் கடந்த ஜ{லை 29 ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்த சேதத்தை சரி செய்ய ஒரு ஆண்டு எடுக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. காசாவில் ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்திருக்கும் சுமார் 22,000 பலஸ்தீன அகதிகள் சுத்தமான நீர் வசதி இன்றி இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. போதிய நீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லா ததால் இடம்பெயர்ந்திருக்கும் அகதி களுக்கு இடையில் பல்வேறு நோய் கள் பரவும் அபாயம் இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. காசாவின் நீர் கட்ட மைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி யதாலேயே அங்கு சுத்தமான நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்ப தாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. காசா குடியிருப் பாளரான பேரியல் அல் சானீன் என்ற பெண் ஏனைய பலரைப் போன்று ஒரு மாதத்திற்கு மேலாக இன்னும் குளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சனீன் ஐ.நா. அகதி முகாமில் தஞ்சம் புகுந்தவராவர். காசாவில் கோடை வெப்ப நிலை 93 பாரன்ஹீட் வரை உயரக்கூடியதாகும். "இங்கே தண்ணீர் வசதி இல்லை. கழிவறைகள் அதிக அசுத்தம் கொண்டதாக இருக்கின்றன. இங்கே வாழ முடியுமான சூழல் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார். காசாவில் தொடர்ந்தும் 365,000 பேர் இடம்பெயர்ந்த நிலையில் இருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

Related

சர்வதேசம் 7299513927242142220

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item