அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற தேசிய அடையாள அட்டை கட்டாயம் – மைத்திரிபால சிறிசேன

எதிர்வரும் காலங்களில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள தேசிய அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை வைத்தியசாலைகளில் தங்கியிருந்து இலவசமாக சிகிச்சபை பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சார்க் பிராந்திய வலய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இலங்கை வைத்தியசாலை நலன்களை சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இலங்கை நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டிய நலன்களை வேறு நாட்டு மக்கள் அனுபவிக்கின்றனர். பெறுமதியான சத்திரசிகிச்சைளை அவர்கள் சட்டவிரோதமாக இலவசமாக பெற்றுக்கொண்டுள்ளனர்.
வெளிநபர்கள் உள்நாட்டு மருத்துவ சேவையின் நன்மைகள் அனுபவிப்பதனை தடுக்கும் நோக்கில் எதிர்காலத்தில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அனைவரும் தங்களது தேசிய அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
என்றாலும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொள்ள தேசிய அடையாள அட்டை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

உள் நாடு 6689463579843699952

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item