மாயமான மலேசிய விமானம்: இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டுபிடிப்பு

மாயமான மலேசிய விமானத்தை தேடும் குழுவினர் இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.

239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8–ந்தேதி நடுவானில் மாயமானது.

நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லாமல் இருந்தது. தொடர்ந்து மர்மமே நீடித்து வருகிறது. தற்போது இவ்விவகாரத்தில் சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மாயமான மலேசிய விமானத்தை தேடும் குழுவினர் இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். கடலில் கண்டுபிடிக்கப்பட்டு பொருட்கள் விமானத்தின் உதிரி பாகங்கள்தானா என்பதை அறிய அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாக ஆஸ்திரேலியா போக்குவரத்து துறை அமைச்சர் லியோ டியாங் லாய் தெரிவித்துள்ளார். கண்டுபிடிக்கப்பட்டு உள்ள 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாக தெரியவில்லை என்பதினாலே இந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் உதிரி பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவின் பர்கோ டிஸ்கவரி ஷிப் தேடுதல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு உதவியாக மலேசியாவின் கோ பீனிக்ஸ் என்ற கப்பலும் தேடுதல் வேட்டைக்கு செல்கிறது. மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க இந்தியப் பெருங்கடலில் இதுவரை ஆய்வு செய்யாத ஆழ்கடல் பகுதிகளையெல்லாம் ஆஸ்திரேலிய தேடுதல் அணி ஆய்வு செய்து வருகிறது.

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்திய பெருங்கடல் அடித்தரை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் 2000 மீட்டர்கள் உயரமுள்ள எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தொடர்ந்து 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

Related

சர்வதேசம் 4089138814968982119

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item