சதொச தலைமையகத்துக்கு சீல்! அமைச்சர் காமினி ஜயவிக்கிரம நடவடிக்கை

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_19.html
சதொச தலைமையகத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து முறைகேடுகள் தொடர்பான பைல்கள், ஆவணங்கள் சதொச தலைமையகத்தில் இருந்து வெளியில் கடத்தப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கையாக தற்போது சதொச தலைமையகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா பிறப்பித்துள்ளதாக சதொச தலைமையக வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.