இலங்கை மக்களின் நலன் கருதியே விசாரணை – நவநீதம்பிள்ளை

மனித உரிமை ஆணையத்துடன் மோதல் போக்கை கடைபிடிப்பதை விட விசாரணை அறிக்கையை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைக்குச் செல்லாமலேயே அங்கு நடந்த யுத்தக் குற்றங்கள் பற்றிய ஒரு பயனுள்ள விசாரணையை ஐ.நா விசாரணைக் குழுவால் நடத்த முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்ய ஐ.நா. குழுவொன்றை அண்மையில் அமைத்தது. இக்குழுவுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு மறுத்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது பற்றி நவி பிள்ளை மேலும் கூறுகையில், 

இலங்கையில் நடந்த அத்துமீறல்களுக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்வதற்கு இந்த விசாரணை மிகவும் அவசியம். அத்துடன், இலங்கை மக்களின் நலன் கருதியும், அமைதி மற்றும் மறுசீரமைப்பை நிலை நிறுத்தும் வகையிலேயே இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தொரிவித்துள்ளார்

Related

உள் நாடு 4217829827616827751

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item