கொரிய மொழி பரீட்சைக்காக 10,000 விண்ணப்பங்கள்

கொரிய மொழி பரீட்சைக்காக 10,000 விண்ணப்பங்கள்கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சையில் தோற்றுவதற்கு இம்முறை பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை மாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டார்.
கடந்த 11ஆம் திகதிமுதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒக்டோபர் 11, 12ஆம் திகதிகளில் கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை நடைபெறவுள்ளது.
நாடளாவியரீதியிலுள்ள 14 நிலையங்களில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியுமென மங்கள ரந்தெனிய தெரிவிக்கின்றார்.
தென் கொரியாவில் மீன்பிடி மற்றும் கட்டட நிர்மாணத் துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்கள் இந்த பரீட்சையின் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டது.

Related

உள் நாடு 3453884647284224051

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item