பாரிஸில் கொள்ளையர்களிடம் 250,000 யூரோவை பறிகொடுத்த சவூதி இளவரசர்

பிரான்ஸில் கொள்­ளையர் குழு­வொன்­றினால் துப்­பாக்கி முனையில் 250,000 யூரோ பணத்தை (சுமார் 4 கோடியே 32 இலட்சம் ரூபா) பறி­கொ­டுத்த சவூதி இள­வ­ரசர் அப்துல் அஸீஸ் பின் பஹ்த் என பிரெஞ்சு பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

பிரான்ஸின் பாரிஸ் நக­ருக்கு அருகில் கடந்த திங்­கட்­கி­ழமை ஆயு­த­மேந்­திய குழு­வொன்றினால் இப்­பணம் சவூதி இள­வ­ரசர் ஒரு­வ­ரிடம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அந்த இள­வ­ரசர் யாரெனத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் சவூதி இள­வ­ரசர் அப்துல் அஸீஸ் பின் பஹ்த்தான் அவர் என பிரெஞ்சு பொலிஸ் வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

இவர் 2005 ஆம் ஆண்டு காலம்­சென்ற சவூதி அரே­பிய மன்னர் பஹ்த் பின் அப்துல் அஸீஸின் கனிஷ்ட புதல்­வராவார்.

10 வாக­னங்கள் கொண்ட வாகனத் தொட­ர­ணி­யொன்றில் தனது மெய்ப்­பா­து­கா­வ­லர்கள் உட்­பட ஒரு குழு­வி­ன­ருடன் இள­வ­ரசர் அப்துல் அஸீஸ் பின் பஹ்த் சென்­று­கொண்­டி­ருந்­த­போது ஹொலிவூட் திரைப்­பட பாணியில் கொள்­ளையர் குழு­வொன்று வழி மறித்து 250,000 யூரோ பணத்தை கொள்­ளை­ய­டித்து சென்­றமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

தனது பிரத்­தி­யேக விமா­னத்தில் பயணம் செய்­வ­தற்­காக பாரிஸ் விமான நிலை­ய­மொன்றை நோக்கி இள­வ­ரசர் சென்­று­கொண்­டி­ருந்­த­போதே இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

ஆடம்­பர வாழ்க்­கைக்கு­ பெயர் பெற்ற இள­வ­ரசர் அப்துல் அஸீஸ் பின் பஹ்த், ஒரு தடவை ஸ்பெய்னின் இபிஸா தீவி­லுள்ள உணவு விடு­தி­யொன்றில் 75,000 யூரோ பணத்தை (சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபா) டிப்ஸ் ஆக விட்டுச் சென்றிருந்ததாக செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Related

சர்வதேசம் 5029427828742809075

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item