தேசிய மட்ட போட்டியில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி சம்பியன் (படங்கள்)
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_136.html
ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்விச்சேவைகள் அமைச்சும் இணைந்து இவ்வருடம்(2014) அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் போசணையும் சுகவாழ்வும் எனும் தலைப்பில் நடத்திய அறிவு அளவீட்டு போட்டியில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் தேசிய ரீதியில் 1ஆம் இடத்தை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன் தெரிவித்தார்.
இம் மாணவர்களுக்கான சம்பியன் கிண்ணத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீனிடம் அண்மையில் அநுராதபுரம் திறப்பன மஹானாம மகா வித்தியாலயத்தில் நடந்த வைபவத்தில் வைத்து வழங்கினார். இதன் போது கிழக்கு மாகாணக கலவித் திணைக்கள உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலை சுகாதார மேம்பாட்டு திட்ட இணைப்பாளருமான உதய குமார், கல்லூரியின் இப் போட்டி நிகழ்சிக்கான பொறுப்பாசிதரியர் ஏ.எல்.சுஹைப், வெற்றி பெற்ற மாணவர்களான அப்துல் முனாப் பாத்திமா இஸ்ஹாறா, முகம்மது பாதுஸா பாத்திமா ஸமா, முகம்மட் ஹனிபா றம்ஸா மசியா, பகுர்டீன் பர்திஸ் இஸ்பாக், முகம்மட் றிபாயத்துல்லா றிமாஸ் அகமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாகாண மட்டத்தில் ஒரு பாடசாலை வீதம் 9 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அப்பாடசாலைகளுக்கிடையிலான கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் களனி பல்கலைக்கழக அழகியல் கலைப்பிரிவில் கடந்த மாதம் (20,21,22 ஜூலை) 20ஆம்,21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் நடை பெற்றன.
வட மாகாணத்தில் இருந்து வவுனியா தெற்கு தமிழ் மகா வித்தியாலயமும், தென்மாகாணத்தில் மாத்தறை ராஹூல வித்தியாலயமும், மேல் மாகாணத்தில் இருந்து கந்தான புனித செபெஸ்தஸயன் மகளிர் கல்லூரியும், ஊவா மாகாணத்தில் இருந்து மொனராகல வித்தியாலோக்க வித்தியாலயமும், கிழக்கு மாகாணத்தில் இருந்து அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியும், வட மேல் மாகாணத்தில் இருந்து வென்னப்புவ புனித கன்னியர் பாடசாலையும், மத்திய மாகாணத்தில் இருந்து கண்டி மகாமாய மகளீர் கல்லூரியும், வட மத்திய மாகாணத்தில் இருந்து ஹிங்குராக்கொட கிதலேகம மகா வித்தியாலயமம், சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து நுராணியா மகா வித்தியாலயமும் கலந்து கொண்டன.