ஹமாஸ் இஸ்ரேல் ஏற்படுத்திய பல் துருவ உலக அரசியலாதிக்கம்

ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் மத்தியிலான போரின் சர்வதேச அரசியல் பரிமாணங்கள் தொடர்பான அரசியல் விஞ்ஞானிகளது கலந்துரையாடல் சுவாரஷ்யமானது. சர்வதேச, பிராந்திய, தேசிய அரசியல் தளங்களில் இக்கலந்துரையாடல் முக்கியத்துவம் பெற்றமைக்கான பிரதான காரணம், ஹமாஸ் இஸ்ரேலிய யுத்தமானது பாரிய வலுச்சமநிலை (Regional Balance Of Power) மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றமையாகும்.

ஹமாஸ் இஸ்ரேலிய யுத்தத்தின் சர்வதேச பரிமாணங்கள் பற்றிய அரசியல் புத்திஜீவிகளது கலந்துரையாடலில் பல கருப்பொருள்கள் விவாதிக்கப்படுகின்றன. அதில் ‘பல் துருவ உலக அரசியலாதிக்கம்” (Multi Poler Political Domination) என்ற சிந்தனையும் அரசியல் விஞ்ஞானிகளது விவாதத்திற்கு உட்பட்ட ஒன்றாகும்.

சர்வதேச அரசியல் தளத்தின் மாற்றங்களை தீர்மானிக்கும் சக்திகள் அமெரிக்காவின் நண்பர்களாக இருந்தாலும் கூட> இனியும் அமெரிக்காவின் கரங்களுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை என்ற பல் துருவ அரசியலாதிக்கத்தினை ஹமாஸ் இஸ்ரேலிய யுத்தம் நிறுவுகிறது என துருக்கியின் (Daily Sabah) பத்திரிகையின் அரசியல் விமர்சகர் சாதிக் உனாய் குறிப்பிடுகிறார்.

மேலும்> துருக்கி மற்றும் கத்தாரின் பிராந்திய ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்றமை காஸா இஸ்ரேலிய யுத்தம் சொல்லும் செய்தியாகும். இவை அமெரிக்காவின் நணபர்கள் பட்டியலில் இடம்பெறும் தேசங்கள். ஆனால்> ஹமாஸ் இஸ்ரேலியப் போரில் பல் பரிமாண இராஜதந்திர அழுத்தங்களுக்குப் பிற்பாடும் இவ்விரு நாடுகளும் அமெரிக்காவின் கரங்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளவில்லை என சாதிக் உனாய் குறிப்பிடுகிறார்.

சர்வதேச தளத்திற்கு துருக்கியை மீளழைப்பதை நீண்ட காலமாக அமெரிக்கா தவிர்த்து வருகின்றது. நேரடியாக துருக்கியின் புவி அரசியலுடன் தொடர்புபட்ட பல்வேறு பிரச்சினைகளிலேயே அங்காராவிடம் ஆலோசனை செய்வதை வொஷிங்டன் இராஜதந்திரமாக விட்டுவிட்டது.

உதாரணமாக> சிரியாவின் இரசாயன ஆயுதக் களைப்புப் பேச்சுவார்த்தைகள்> ஈரானின் அணுச் செறிவாக்கலுடன் தொடர்புபட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் ஈராக்கிய அரசியலில் புதிய பரிணாமங்கள் போன்றன துருக்கியின் பாதுகாப்புடனும் அதன் எல்லைகளுடனும் நேரடியாகத் தொடர்புபட்ட விடயங்கள். இவை எதிலும் தீர்மானமெடுக்கும் சபைக்கு துருக்கியை அமெரிக்கா அழைக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் அழைத்த போதிலும் பேசுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை. அரிதாக பேசுவதற்கு அனுமதியளித்தாலும் செவிசாய்ப்பதற்கு அமெரிக்கா தயாராக இருக்கவில்லை.

இதன் மிக மோசமான கட்டமே இவையனைத்தும் துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கையினுடைய தோல்வியின் அடையாளம் என வெளிநாட்டுக் கொள்கை நிபுணர்கள் கருத்து வெளியிட்டனர்.

அதேவேளை துருக்கியின் பிராந்திய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தல் என்பது அமெரிக்காவின் நலனுடன் நேரடியாகத் தொடர்புற்ற அம்சம் என்பதை விடவும் மத்திய கிழக்கு மன்னர்களின் அவசர தேவையாகக் கருதப்பட்டது. சவூதி அரேபியா> ஜோர்தான்> பஹ்ரைன்> குவைட்> எமிரேட்ஸ்> எகிப்து போன்ற நாடுகள் துருக்கியின் பிராந்திய ஆதிக்கத்தின் வீச்சைக் கட்டுப்படுத்தும் இரும்பு அரண்களாக தொழிற்பட்டன.

இவ்வாறு மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் துருக்கியின் இராஜதந்திர ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு கோணங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை ஓரளவு வெற்றியும் பெற்றன. இவை அனைத்தையும் தாண்டியே காஸா இஸ்ரேலிய யுத்தம் மீண்டும் மத்திய கிழக்கின் இராஜதந்திர கதாபாத்திரமாக துருக்கியை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

அது வரலாறு நெடுகிலும் பலஸ்தீன் விவகாரத்தின் மத்தியஸ்தத்தை எகிப்தே வகித்து வருகிறது. எகிப்தைத் தவிர்த்து பலஸ்தீன் சமாதானமானது வெறும் கனவு என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடு. ஆனால்> எகிப்தின் வகிபாகத்தையும் விஞ்சிய நிலையில்> சமாதானப் பேச்சுவார்ததை விடயத்தில் கத்தார் மற்றும் துருக்கிக் கூட்டு முக்கியத்துவம் பெற்றது.

இதனால்> பலஸ்தீன் விவகாரத்தில் எகிப்தின் வகிபாகம்> இராஜதந்திரம் என்ற நிலையிலிருந்து ரபாஹ் வாயிற் கதவின் காவற்காரன் என்ற நிலைக்கு மாறிவிட்டது என பஹ்மி ஹுவைதி குறிப்பிடுகிறார். இவையனைத்தும்> அமெரிக்காவின் அரசியல் ஆதிக்கத்தின் சகதிச் சமநிலையில் பாரிய வீழ்ச்சியைச் சுட்டிக் காட்டுவதுடன் பல் துருவ அரசியல் ஒழுங்கின் யதார்த்த தன்மையை ஊன்றி வலியுறுத்துகிறது.

பல் துருவ அரசியல் ஒழுங்கின் வலிமையை தற்போது பல நாடுகள் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளன. கட்டம் கட்டமாக சர்வதேச ஜாம்பவான்களின் அரசியல் ஆதிக்க காய்நகர்த்தல்களை விமர்சிக்கவும் அதற்கெதிராக செயற்படவும் துவங்கியுள்ளன. இந்தப் பல் துருவ அரசியல் ஒழுங்கு கொடுத்த வலிமையும் விசையுமே துருக்கியையும் கத்தாரையும் காஸாவுடன் நேரடியாக புவியியல் ரீதியாகத் தொடர்புபடும் பிராந்திய நாடுகளின் முன்னெடுப்புகளுக்கு எதிராகத் செயற்படத் தூண்டின.

காஸா இஸ்ரேலிய யுத்தத்தின் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் செயற்பாடுகளும் பல் துருவ அரசியல் ஒழுங்கின் அரசியல் ஆதிக்கத்தினை உணர்த்துகின்றன. இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடு என பொலிவியா பிரகடனம் செய்தது. எந்த இராஜதந்திர உறவுகளையும் நிறுத்திக் கொள்வதற்கு பேரூ தயங்கமாட்டாது என பேரூவின் தலைவர் அறிக்கைவிட்டார்.

அதற்கும் மேலால் யூத டயஸ் போராவின் பலத்த அழுத்தங்களையும் தாண்டி> காஸாவில் நடைபெறும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர்> இனச் சுத்திகரிப்பு> கூட்டுப் படுகொலை என பிரேஸில் அதிபர் னுடைஅயா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. துருக்கிய அரசியல் விமர்சகர் சாதிக் உனாய்> பிரேஸிலும் துருக்கியும் பல் துருவ உலக ஒழுங்கை கிழக்காவும் மேற்காகவும் உரத்துப் பிரகடனம் செய்யும் இரு தேசங்கள் என குறிப்பிடுகிறார்.

மேலும்> காஸா இஸ்ரேலிய யுத்தம் தொடர்பான மக்கள் அபிப்பிராயம் அதிகளவில் பலஸ்தீன் மக்களுக்கு சார்பானதாகவே காணப்படுகிறது. பல மேற்கு நாடுகளிலும் பலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. இந்நிலை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தேயம் பிரசவித்த ஊடகம்> புதிய பல் துருவ உலக ஒழுங்கின் ஊடகத்துவத்தின் முன்னால் தோல்வியடைந்து வருகின்றமையை தெளிவாக அடையாளப்படுத்துகின்றது.

குறிப்பாக> சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் மத்தியிலான யுத்தத்தில் பலஸ்தீன் வெற்றி பெற்றுவிட்டது என்பதே கள நிலைவரங்கள் சொல்லும் செய்தியாகும். உண்மையான யுத்த கள தோல்விகளை விட சமூக வலைத்தள தோல்வியால் யூத ஸியோனிஸம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் ஒழுக்கமற்ற இராணுவம் இஸ்ரேலினுடையது என்ற கருத்தியலை இஸ்ரேலிய புத்திஜீவிகள் விவாதிக்கும் அளவுக்கு> ஊடக யுத்தத்தில் பலஸ்தீன் வெற்றி பெற்றுள்ளமை நோக்கத்தக்கது.

இறுதியாக> இன்று ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் மத்தியிலான யுத்தத்தில் பதாஹ் ஹமாஸுக்கு சார்பாகவும் பலஸ்தீன் பிரச்சினைக்கு ஆதரவாகவும் செயற்படுதன் பின்புலத்திலும் பல் துருவ அரசியலாதிக்கத்தின் வலிமை நியாயமாக பங்களித்திருக்கிறது. காரணம்> இதற்கு முன்னர் பலஸ்தீனைத் தாரைவார்க்கும் அனைத்து உடன்படிக்கைகளிலும் கண்ணை மூடிக்கொண்டு கைச்சாத்திடும் சரணாகதி அரசியலைத்தான் பதாஹ் செய்து வந்தது. இதுவே> 1993 இல் ஒஸ்லோவிலும் 1999 இல் கேம்ப்டேவிட் என்ற பெயரிலும் அரங்கேறியது. அதன்போது யாரும் பதாஹ்வை கேள்வி கேட்கவில்லை.

அரபாத்தை நோக்கி உத்தியோகபூர்வமாக விரலை நீட்டுவதற்கு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா அனுமதி வழங்கவுமில்லை. அதற்கு யாரும் தைரியம் பெறவுமில்லை. ஆனால்> இனிமேலும் பதாஹ்வால் அப்படி நாடகம் நடிக்க முடியாது என்பது தெளிவு. ஒரு வேளை ஹமாஸுக்கு சார்பாக பதாஹ் நிமிர்ந்து நிற்பதற்கு தயங்கினால்> அப்பாஸின் அரசியல் எதிர்காலம் குப்பைத் தொட்டியில் எறியப்படலாம் என்பது ஜோன் கெரிக்கு நன்றாகத் தெரியும்.

இவ்வாறு அப்பாஸின் தலைமையிலான பதாஹ்வின் மீது அமெரிக்கா> இஸ்ரேல் பிரயோகிக்கும் அழுத்தங்களுக்கு சரிசமனான அழுத்தங்களை பிரயோகிக்கும் ஏனைய சர்வதேச கதாநாயகர்கள் உருவாகிவிட்டனர். இதுவே பதாஹ்வை ஆடாமல் அசையாமல் விழி தூங்கிய நிலையில் ஹமாஸுக்கு சார்பாக நிற்பதற்கு வகை செய்துள்ளது.

நன்றி: எங்கள் தேசம்

Related

Articles 8711624991518320591

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item