ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பம் கோருகின்றது கல்வி அமைச்சு

க.பொ.த. உயர்தரப்பிரிவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில் நுட்பவியல் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் ஆகியோரை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கு கல்வியமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

புதிய தொழில் நுட்பவியல் பாடத்திட்டத்தின் கீழ் உயிர்முறைமைகள் தொழில் நுட்பவியல் மற்றும் தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய இரு பாடங்களையும் கற்பிப்பதற்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பட்டதாரிகளை ஆசிரியர் சேவை தரம் 3-1ற்குள் ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

அதே போல் புதிய தொழில் நுட்பவியல் பாடத்திட்டத்தின் கீழ் பொறியியல் தொழில் நுட்பவியல் பாடத்தினை கற்பிப்பதற்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல தொழில் நுட்ப டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவை தரம் 3-1 ற்குள் ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரவியல் தொழில்நுட்பம் கட்டுமாணத்தொழில் நுட்பம் மின்னியல் மற்றும் இலத்திரனியல் தொழில் நுட்பம் தொடர்பிலான டிப்ளோமாதாரிகள் விண்ணப்பிக்க முடியும்.

மேற்குறிப்பட்ட பாடங்களில் பட்டங்கள் மற்றும் டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். - Virakesari

Related

உள் நாடு 5304068319659074664

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item