ராஜித சேனாரத்னவிடம் நஷ்ட ஈடு கோரி பிரான்ஸில் உள்ள இலங்கையர் வழக்கு
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_400.html
அலுத்தக பேருவல அசம்பாவிதங்களை தொடர்ந்து அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களும் பொதுபல பொது செயளாலர் ஞான சார தேரரும் ஒருவரை யொருவர் விமர்சிக்க தொடங்கியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினக்களுக்கு முன்னர் தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்கு ஒரு பில்லியன் நஷ்டஈடு கேட்டு அமைச்சர் ராஜித சேனாரத்ன பொதுபல சேனா செயளாலருக்கு எதிராக வழக்கு தொடருவதாக அறிவித்திருந்தார்.
தற்போது, அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களிடம் நஷ்ட ஈடு கோரி பிரான்சில் வசிக்கும் இலங்கையர் சுனில் காமினி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் அமைச்சர் நோர்வே நாட்டில் ஞானசார தேரர் விடிதலை புலி உறுப்பினர்களுடன் சேர்ந்து எடுத்துகொண்டதாக கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.குறித்த புகைப்படத்தில் தேரருக்கு அருகில் பிரான்சில் வசிக்கும் இலங்கையர் சுனில் காமினி உள்ளார்.
குறித்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு விடுதலை புலிகளுடன் தொடர்ப்பு இருப்பதாக செய்தி பரவியுள்ளதாகவும் இதனால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தான் மன அலுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களிடம் நஷ்ட ஈடு கோரி பிரான்சில் வசிக்கும் இலங்கையர் சுனில் காமினி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். - MN