ஐ.நா.அமர்வில் இலங்கை, இஸ்ரேல் தொடர்பில் ஆராய்வு

ஐ.நா அலுவலகத்தில் ஒக்டோபர் 07 தொடக்கம் 31 வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை 112ஆவது அமர்வுகளின் போது இலங்கை பற்றி ஆராயப்படும் என்று ஐ.நா அறிவித்துள்ளது.

யுத்தம் நடந்த காலத்தில் பொதுமக்களுக்கு உண்டான இழப்புக்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தின் விசாரணை, நீதிமன்றத்தின் விசாரணைகள் கண்டுள்ள முன்னேற்றம், அரசு அல்லது அரசல்லாத வேறு நிறுவனங்களிலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறலுக்கான ‘தண்டனை இன்மை’ எனும் பிரச்சினை தொடர்பில் அரசின் நடவடிக்கை உட்பட பல பிரச்சினைகள் பற்றியும் ஐ.நா. இலங்கை அரசாங்கத்திடம் வினவியுள்ளது.

112 ஆவது அமர்வின் போது இலங்கை மட்டுமன்றி புறுண்டி, ஹைய்ட்டி, மால்டா, மொன்ரேநெக்ரோ மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீதான அறிக்கைகள் கவனத்துக்கு வரவுள்ளன.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தத்தின் 40ஆவது உறுப்புகளுக்கு அமைய, மனித உரிமைகள் பேரவையின் ஒக்டோபர் அமர்வுக்கான அதன் அறிக்கையை அரசாங்கம் ஏற்கெனவே சமர்ப்பித்து விட்டது.

இதில,; 2003ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் முதல் 2012ஆம் ஆண்டு காலத்துக்கான முன்னேற்றங்கள் விசேடமாக காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, ஜெனிவாவில் உள்ள ஐ.நா விசாரணை ஆணையினருக்கு அனுப்புவதற்காக மோசடியான வகையில் தகவல்கள் பெறப்படுவதாக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Related

உள் நாடு 2855429679269309488

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item