மாயமான மலேசிய விமானம் நினைத்ததற்கு முன்பே திரும்பியதா? புதிய தகவல்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_600.html
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி கிளம்பிய மலேசிய விமானம் எம்.ஹெச். 370 சீனாவை அடையாமல் மாயமானது.
இதையடுத்து பல நாடுகள் இணைந்து பல நாட்களாக நடத்திய தேடுதல் பணி தோல்வியடைந்ததால், விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
இந்நிலையில் விமானம் முன்பு நினைத்ததை விட முன்கூட்டியே தெற்கு பக்கம் திரும்பியிருக்கக்கூடும் என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தற்போது விமானத்தை தேடும் பகுதியில் இருந்து தெற்கே அதை தேட உள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் கடலுக்கு அடியில் மேலும் ஆழமான பகுதியில் தேடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நிபுணர்கள் சிலர் விமானம் தற்போது தேடப்படும் பகுதியில் இல்லை என்று கூறுவதால் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.