கர்ப்பிணித் தாய் மரணம்: டிப்பர் வாகனத்தை தீயிட்டுக் கொழுத்திய ஊர் மக்கள் (படங்கள்)

வீதியில் நின்ற கர்ப்பிணித் தாயொருவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில், அவர் ஸ்தலத்திலே உயிரிழந்த சம்பவம் யாழ். நவக்கிரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணித் தாய் மீதே டிப்பர் வாகனம் மோதியுள்ளது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குக் காரணமான வாகன சாரதி தப்பியோடியதையடுத்து, ஆத்திரமுற்ற ஊர்மக்கள் டிப்பர் வாகனத்தை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.

அந்த வாகனத்தின் பெருமளவான பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

கோப்பாய், காங்கேசன்துறை, ஆகிய பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் வாகனத்தை தீயிட்டு கொழுத்தியவர்களைத் துரத்தியதுடன், வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.




Related

உள் நாடு 4168879360624496604

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item