ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19 ஆவது வருடாந்த அங்கத்தவர் ஒன்று கூடல் நாளை சனிக்கிழமை கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.
காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பதா காதிம் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.