பலஸ்தீன் : யூதர்களின் உரிமையா? - காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலில் தெளிவுரை மகாநாடு

காலத்தின் தேவைகருதி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 08/08/2014 அதாவது வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் “பலஸ்தீன் : யூதர்களின் உரிமையா?” என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் M.H.M. யஹ்யா (பலாஹி,பின்னூரி) அவர்களால் ஆண்களுக்கான விஷேட மார்க்க தெளிவுரை மகாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யூதர்கள் பற்றிய ஓர் அறிமுகம் , யூதர்கள் பற்றி அல்குர்ஆனும் நபிமொழியும் , முஸ்லிம் உம்மத்தின் முதல் கிப்லா , பலஸ்தீன் ஏன் தாக்கப்படுகிறது , யூதர்களுக்கு நாம் எவ்வாறு உதவுகிறோம் , பலஸ்தீன் மக்களுக்கு நாம் செய்யும் உதவிகளும் எமது கடமைகளும்... மற்றும் இன்னும் பல உப தலைப்புகளில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
எனவே அனைத்துப் பொதுமக்களையும் உரிய நேரத்திற்க்கு சமூகமளித்து இறுதிவரை கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் இந்நிகழ்வு www.slyouths.com / www.slyouth.net மூலமாக நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.

ஏற்பாடு,
SLyouthS நிருவாகக் குழு.

Related

உள் நாடு 4319371831512005216

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item