பலஸ்தீனத்திற்கு இலங்கை நிதி உதவி

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_7.html
பலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மோதல்களில் படையினரும் இரு நாடுகளினதும் சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகளவில் பலஸ்தீன சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன - இலங்கை நட்புறவு அமைப்பின் ஸ்தாபகரான ஜனாதிபதி பலஸ்தீனத்திற்கு நிதி உதவியை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி பலஸ்தீனத்திற்கு விஜயம் செய்திருந்த போது அவருக்கு விருது வழங்கப்பட்டதுடன் அந்நாட்டின் ஒர் வீதிக்கு ஜனாதிபதியின் பெயரும் சூட்டப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.