பதினாறு வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய நபர் கைது

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_885.html
குறிப்பிட்ட சிறுமியை சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
பின்னர் அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக வேறு நபர்களுக்கும் ஒப்படைத்துள்ளார் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிடுகின்றது.
இந்த சிறுமி தற்போது கர்ப்பமுற்றிருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மஹியங்கனை பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவரே மஹரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை புதுக்கடை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.