யுத்தக் குற்றச்சாட்டு விசாரணகள் தொடர்பில் தமது குழுவினருக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்தாலும் தமது விசாரணைப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஐ.நா.விசாரணைக் குழுவை எக்காரணம் கொண்டும் இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளிநாட்டுச் செய்திச் சேவைகளுக்கு கருத்துத் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்தே,இன்று பிபிசிக்கு வழங்கிய பேட்டியில் நவநீதம்பிள்ளை இவ்வாறு தெரிவித்திருக்கிறார்