விமல் வீரவன்சவின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு முறைப்பாடு

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_14.html
சட்டத்தரணி நாமல் ராஜபக்ச இந்த முறைப்பாட்டை செய்ய உள்ளார்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
விமல் வீரவன்ச கோடிக்கணக்கான பெறுமதியுடைய வீடுகள் அமைத்துள்ளதாகவும், பல இடங்களில் காணிகளை கொள்வனவு செய்துள்ளதாகவும், வீரவன்சவின் மனைவி திடீரென ஆரம்பித்துள்ள கைத்தொழில்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோர உள்ளார்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
அமைச்சர்களின் சம்பளத்தைக் கொண்டு நிர்மாணிக்க முடியாத அளவிற்கு பாரிய வீடுகளை விமல் வீரவன்ச நிர்மாணித்துள்ளார்.
கொட்டாவ கடுவெல வீதிக்கு அருகாமையில் சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான இரண்டு வீடுகளை வீரவன்ச நிர்மாணித்துள்ளார்.
வீரவன்சவின் மனைவி வட்டிக்கு பணம் கொடுப்பதுடன், ஆடைக் கைத்தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வருகின்றார்.
இந்த விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் 10.30 அளவில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படும் என சட்டத்தரணி நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி நாமல் ராஜபக்ச இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எங்கள் தேசிய முன்னணி என்ற கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.