இலங்கை மீன்களை கொள்வனவு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_49.html
EU suspends import of Sri Lanka’s fish; local prices to tumble
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடின் தமது நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மீன் உற்பத்தி ஏற்றிமதி சங்கம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் மீன் உற்பத்தி நிறுவனங்களின் செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளதென இலங்கை மீன் உற்பத்தி ஏற்றுமதி சங்கத்தின் பேச்சாளர் சன்ன வீரதுங்க தெரிவித்தார்.
இதனால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 1500 டொன் மீன் மாதாந்தம் உள்நாட்டு சந்தைக்கு மிகுதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் உள்நாட்டு சந்தையில் மீன் விலை பாரிய வீழ்ச்சி அடையும். ஆனால் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் 90% ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என சன்ன வீரதுங்க தெரிவித்தார்.