சுதந்திர கட்சியை பாதுகாத்து தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்: மஹிந்த ராஜபக்ஷ

EXCLUSIVE: Will protect SLFP members, party; continue politics - MR

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாக்கவென தொடர்ந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு சபாநாயகர் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கட்சியின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க மஹிந்த இணக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விட்டுக் கொடுக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related

உள் நாடு 4606128976530072627

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item