ஒரே நாளில் ATM இயந்திரம் மூலம் 205 கோடி ரூபா வழங்கி கொமர்ஷல் வங்கி சாதனை!

https://newsweligama.blogspot.com/2014/04/atm-205.html
இலங்கையில் ATM அட்டை இயந்திரம் மூலம் ஒரே நாளில் அதிக பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கொமர்ஷல் வங்கி சாதனை படைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதுவருடப் பிறப்பை அண்மித்த காலப் பகுதியில் அதாவது ஏப்ரல் 11ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டும் நாடெங்கும் உள்ள தனது 585 ATM இயந்திரம் மூலம் 205 கோடி ரூபாவை தனது வாடிக்கையாளர்களுக்கு கொமர்ஷல் வங்கி வழங்கியிருக்கின்றது.
இது ஒரே நாளில் அதிக தொகை என்ற அதே வங்கியின் கடந்த வருட (2013) சாதனையான 179 கோடி ரூபாவை விட அதிகமாகும்.
தமிழ் - சிங்கள புதுவருட காலத்தில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ம் திகதி வரையான பன்னிரண்டு நாட்களில் மட்டும் அந்த வங்கி ATM இயந்திரங்கள் மூலம் ஆயிரத்தி 543 கோடி 80 இலட்சம் ரூபாவை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கின்றது.