பொது பல சேனாவின் குற்றச்சாட்டுகளுக்கு ராஜிதவின் பதில்

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தன் மீது திணித்த குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ராஜித சேனாரத்ன நிரகரித்துள்ளார்.

பொது பல சேனா நோர்வே நாட்டில் இருந்து நிதியிதவி பெற்றது என தாம் முன்வைத்த கருத்துக்களில் உண்மை உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

ஆனால் அந்த்க் குற்றச்சாட்டு வெறும் வாய் மூலம் முன்வைக்கப்பட்டதே தவிர அது நிரூபிக்கப்படவில்லை என ஞானசார தேரர் கூறியுள்ளார்.




பொது பல சேனாவின் செயலாளர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய போது இலங்கையிலுள்ள அமைச்சரவை ஒரு பன்றித் தொழுவம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தமது இயக்கம் எந்த ஒரு அரசியல்வாதியிடம் இருந்தும் ஒரு ரூபா பணத்தைக் கூட எஉத்ததில்லை எனவும் கூறியிருந்தார்.

எனினும் பொது பல சேனா அமைப்பினர் சில அமைச்சர்களிடம் இருந்து வரப்பிரசாதங்களைப் பெற்றுள்ளமையை நிரூபிக்க தம்மிடம் சான்றுகள் உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.




அத்துடன் பொது பல சேனா நேற்று தெரிவித்த கருத்துக்களுக்காக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Related

உள் நாடு 2149992413626625734

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item