ஊவா தேர்தல் ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்டும் - அனுர குமார திசாநாயக்க

ஊவா மாகாண சபைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு நல்லதோர் பாடம் புகட்டும் என்பதாக ஜே.வி.பி. யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஜே.வி.பி.யின் கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிடுமபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சி வெற்றி பெறும். ஆனால் அதிகாரத்தைப் பெறுவதற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்காது. ஒன்றிரண்டு உறுப்பினர்கள் குறைவாகவே இருப்பார்கள்.

இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கான முயற்சிகளை ஆளுங்கட்சி இப்போதிருந்தே முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. எதி்ர்க்கட்சிகளில் வெற்றி பெறக் கூடியவர்களை ஆளுங்கட்சிக்குத் தாவ வைப்பதற்கான பேரங்கள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சில வேட்பாளர்கள் இந்த வலையில் விழுந்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஊவாவில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதில் பயனில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும், ஆளுங்கட்சியும் ஒருமித்த கருத்தைக் கொண்டவர்கள்.

எனவே ஊவா மாகாணத்தின் வறுமையைப் போக்குவதாயின், அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்த பொதுமக்கள் முன்வரவேண்டும் என்றும் அனுர குமார திசாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Related

உள் நாடு 283556500321818175

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item