பாப்பரசர் பிரான்சிஸ் மன்னார் மடு திருத்தலத்திற்கு விஜயம் செய்வது உறுதி – பரிபாலகர்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_154.html
பாப்பரசரின் மடு வருகையை கர்தினால் அதிமேதகு மல்கம் ரஞ்சித் ஆண்டகை உறுதிப்படுத்தியுள்ளதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமியான்ஸ் பிள்ளை நேற்றைய தினம் இடம்பெற்ற மடுத்திருத்தலத்தின் திருவிழாவின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அருட்தந்தை எமியான்ஸ் பிள்ளை மேலும் தெரிவிக்கையில்;
இலங்கை வருகை தரும் திருத்தந்தை 14 ஆம் திகதி காலை 8 மணிக்கு காலி முகத்திடலில் திருப்பலி ஒப்புக்கொடுத்து விட்டு மாலை 3 மணிக்கு வரலாற்று பிரசித்தி பெற்ற மடுத்திருத்தலத்திற்கு வருகை தரவுள்ளார்.
அவர் மடுவிற்கு வந்து சுமார் ஒரு மணித்தியாலம் எமது மக்களோடு இணைந்து இறை வழிபாட்டில் ஈடுபட்டு ஆசி வழங்குவார்.
திருத்தந்தையின் வருகைக்காக செபிக்குமாறும், மடுத்திருத்தலத்தில் மூன்று நாள் வழிபாடுகள் இடம் பெறும் என்றும் அன்றைய தினம் மக்கள் கலந்து கொண்டு ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் படி ஆயர் வேண்யுள்ளதாகவும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமியான்ஸ் பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.