மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு; வலுவான நிலையில் இலங்கை

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_245.html
இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்த்தன பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர நிறைவில் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைப் பெற்றருந்தார்
எட்டு விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் இலங்கை அணி 165 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது
இரண்டாம் இனிங்ஸில் இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார அரைச்சதம் கடந்ததோடு உபுல்தரங்க 45 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்’
பாகிஸ்தான் சார்பில் அப்துர் ரஹ்மான் 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்
இதேவேளை, இன்றைய தினம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் 9 விக்கட்டுக்களை வீழ்த்தி சாதனை நிலைநாட்டிய வீரர்களின் வரிசையில் இலங்கையின் ரங்கன ஹேரத் இணைந்து கொண்டார்
பாகிஸ்தான் அணியின் முதலாவது இனிங்ஸ் துடுப்பாட்டத்தை 332 ஓட்டங்களுடன் ரங்கன ஹேரத் கட்டுப்படுத்தினார்
இலங்கை அணி தனது முதலாவது இனிங்ஸில் 320 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது