புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்கு விசேட ஆலோசனை

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_685.html
வினாத் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம் தொடர்பில் மாணவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
முதலாவது வினாத்தாளுக்கான விடைகளை எழுதுவதற்கு முற்பகல் 9.30 தொடக்கம் முற்பகல் 10.15 வரை மாணவர்களுக்கு 45 நிமிட காலம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது வினாத்தாளுக்கு 10.45 தொடக்கம் நண்பகல் 12 மணிவரை மாணவர்களுக்கு ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் வழங்கப்படும் என பரீ்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் கால தாமதமின்றி பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிப்பதன் மூலம் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்