திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாசல் அகற்றம்

திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாசல் அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன.
1942 ஆண்டு கட்டப்பட்ட இப் பள்ளிவாசல், மீனவர்களாலும் அந்த ஊர் மக்களாலும் தொடர்ந்து பாவிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த பிரதேசம் இராணுவப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டதால் கடந்த சில நாட்களாக சர்ச்சைகளுக்கு முகம்கொடுத்து வந்தது.
இப்பள்ளிவாசல் தற்போதைய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இன் பாராளுமன்ற உறுப்பினர் காலப்பகுதியில் மீள்நிர்மாணம் செய்யப்பட்டது. இப்பள்ளிவாசலில் அழகிய 40 அடி நீளமுள்ள வுழு செய்யும் தொட்டியும், அழகிய இச் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவன்சில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதை தொடர்புகொண்டு கேட்டபோது, சம்பவம் தொடர்பில் குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியுடன் உரையாடியதாகவும், சம்பவம் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குவதாகவும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவன்சில் செயலாளர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.
இதேவேளை மேற்குறித்த பிரதேசத்தை ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அப்பிரதேச மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.நீர் ஊற்று ஒன்றும் காணப்படுவது குறிப்பிடத்தகது

Related

உள் நாடு 4165633509868185815

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item