வாரியப்பொல சம்பவம்! உண்மையில் நடந்தது என்ன?

அண்மையில் வாரியப்பொல பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. தன் ஆடையை வர்ணித்த ஆணின் கன்னத்தில் அறைந்து, அவரை சரமாரியாக தாக்கியிருந்தார் ஒரு யுவதி. இந்த அசம்பாவிதம் நடைபெற உண்மையான காரணம் என்ன? உண்மையில் இங்கு நடந்தது என்ன?

வாரியப்பொலயை வசிப்பிடமாகக் கொண்ட R.C.சந்திரகுமார தான் குறித்த சம்பவத்தில் சிக்கிக்கொண்டவர்.

இது தொடர்பில் அவரோடு பேசிய போது, அவர் தினசரி கூலிவேலை செய்து பிழைப்பவர் என்றும், அன்றும் தான் ஒரு வேலையை எதிர்பார்த்து பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த நேரம், இப்பெண், தனது நண்பியுடன் பஸ் தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தார் என்றும் கூறியவர்.

அப்பெண் மிகவும் இறுக்கமான ஆடை அணிந்திருந்தார்.. நான் அவரிடம், ' மிஸ் இந்த ஆடை உங்களுக்கு பொருந்தவில்லை, நல்லா இல்லை' என்றேன். உடனே அப்பெண் அது உனக்கு தேவையில்லாத விடயம் என்று கூறிவிட்டு வேகமாக பஸ்சில் ஏறினார்,

நான் பஸ் தரிப்பிடத்தில் நிற்பதைக் கண்டு மீண்டும் இறங்கி வந்து, எனக்கு என்னைப் பற்றி, என் ஆடையை பற்றி சொல்ல நீ யார் என்று கேட்டு, தொடர்ந்து திட்டிக்கொண்டு, கன்னத்தில் அறைய ஆரம்பித்தார். நான் மன்னிப்பு கேட்டும் அவர் தொடர்ந்து தாக்கினார்.

பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைவது தவறான ஒரு செயல் என்பதால் நான் தலையை குனிந்து நின்றேன்"என்றார்.

இந்த தகவல்கள் வெளியான பின் அந்த ஆண் தொடர்பில் ஒரு பரிதாப உணர்வு ஏற்பட, அந்த பெண்ணை அனைவரும் ஒரு விதமான கோப உணர்வோடு பார்க்க தொடங்கிவிட்டனர்.

ஆரம்பத்தில் பெண்ணியம் பேசி, பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று சம்பந்தப்பட்ட ஆணின் மீது கொதித்துப் பாய்ந்த அத்தனை பேரும் இப்போது பெண்ணின் அவசர புத்தி என்று அந்தப் பெண்ணின் மீது கோபத்தை வாரிக் கொட்டுகின்றனர்.

இந்த யுவதியின் எதிர்கால வாழ்வை கவனத்தில் கொண்டு இவர் தொடர்பான பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்த சம்பவத்தின் போது அருகிலிருந்த, அந்த பெண்ணின் காவலராக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட ஜயசிங்க என்பவரிடம் பேசிய போது, அவர் அப்பெண்ணின் காவலர் இல்லை என்ற விடயம் தெரிய வந்தது.

மேலும் அவர் பேசிய போது.. ​"​ஒரு தட​வை​ இரு த​டவை​ அல்ல ​அந்தப்​ பெண் கிட்ட​த்​தட்ட 45 நிமிடங்கள் அந்த இளைஞரை அறைந்தார்​"​ எனவும், அப்பெண் மிகவும் கொடூரமாக நடந்திருந்தார் எனவும் தெரிவித்தார்.

இத்தனை பரபரப்புக்கும் காரணமான சர்ச்சைக்குரிய ​அந்த பெண் இது பற்றி கூறுகையில், ​"​அங்கு நடந்த சம்பவம் என்னவென்று நேரில் கண்டவர்களுக்கு தான் தெரியும், நேற்று நான் இணையத்தில் வீடியோ பதிவுகள் மற்றும் செய்திகளைப் பார்த்தேன், எனக்கு ​மி​கவும் கவலையாக இருந்தது, அதிகமான இளைஞர்கள் என் மேல் கோபமாக உள்ளனர், அவர்கள் கோப​ப் படுவதற்கு இங்கு ஒன்றும் இல்லை​"​ எனக் கூறினார்.

இப்பெண் சரமாரியாக தாக்கும் போது எதுவுமே பேசாமல் அந்த நபர் நிற்பதைப் பார்த்தால், ​அந்த இளைஞன்​ தரப்பிலும் ஏ​தோ​ தவறுள்ளது போல் தான் இருக்கிறது எனவும், பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related

உள் நாடு 9163211051787095419

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item