பெளத்த மதத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அளித்துக்கொண்டிருக்கும் சில பௌத்த அமைப்புக்கள்...

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

யுத்தம் நிலவிய போது வாய் திறக்க கூட வக்கற்றுக்கிடந்த சில பௌத்த அமைப்புக்கள்,யுத்தம் ஓய்ந்த சில நாட்களில் இலங்கைத் திரு நாட்டில் தங்கள் சுயனலத்திற்காகவும்,அரசியல் காய் நகர்த்தலிற்காகவும்,பெளத்த மதத்தை பாதுகாப்பதற்காகவும் பெளத்த அடிப்படை வாததத்தை விதைத்து,இலங்கை நாடு தங்களுக்குரித்தான நாடு என்ற பாணியில் மற்ற மதத்தவர்கள் மீது கடும் போக்குடன் செயற்படுவது யாவரும் அறிந்த விடயம்.

ஜாதிக கெல உறுமய,பொது பல சேன,சிங்கள ராவய,சிங்கள உருமய, ராவண பலய போன்றனவற்றையும் உதாரணமாய் குறிப்பிடலாம்.பொதுவாக எந்த ஒரு மதத்தையும் அளித்து,ஒடுக்கி தங்கள் மதத்தை பரப்ப நினைப்பது அரிவிலித்தனத்திலும் உயரிய அரிவிலித்தனங்களில் ஒன்று.அது எவ் அமைப்பாக இருந்தாலும் சரியே!

அடக்கு,ஒடுக்கு முறைகளுக்கு அகப்பட்டு கடும் போக்குத் தனங்களை பார்க்கும் மக்கள் ஒரு போதும் அவர்கள் மதத்தையோ!அவர்கள் கருத்தையோ! சிந்தித்தும் பார்க்க மாட்டார்கள்.அப்படியானால் அவர்கள் பரப்பத் துடிக்கும் மதம் எங்கே பரவப்போகிறது?அவர்களினது கருத்துக்கள் மக்களிடம் எங்கே செல்லப்போகிறது??

இவ்வாறன அடக்கு முறைகளை கண்ணுறும் மக்கள்,அவர்களின் அடக்கு முறைகளை தங்கள் மதத்தின் இனிய செயற்பாட்டுடன் ஒப்பிட்டு மென் மேலும் தங்கள் மதத்தின் உண்மைத் தன்மையை மென் மேலும் உறுதிப்படுத்தி தங்கள் மதங்களை அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவே இவர்கள் செயல் வழி வகுக்குமே தவிர வேறு எதற்கும் வழி வகுக்கப்போவதில்லை.

சரி இவர்களினது செயற்பாடுகள் ஏனையோரைத் தான் இவர்களினது மதத்தை அறிய செய்வதை விட்டும் தடுக்கிறது, இவர்களினது மதத்தையாவது பாதுகாக்கிறதா?என்றால் அதனையும் ஆதார பூர்வமாய் இல்லை என நிரூபணம் செய்யலாம்.

எங்கள் தேசம் மாதாந்த பத்திரிகையானது "அத "சிங்கள பத்திரிகையை ஆதாரம் காட்டி வெளியிட்டுள்ள தகவலில் கடமை புரிந்த பிக்குகள் வெளியேறிச்செல்கின்றமை,முழு நேர அரசியல் ஈடுபாடு,ஏனைய மதத்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதில் கவனம் செலுத்தும் அளவு விகாரையின் வளர்ச்சியில் பிக்குகள் சிலர் பங்களிப்பாற்றாமையின் விளைவால் 153 பெளத்த விகாரைகள் அண்மைக்காலத்தில் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

தங்கள் விகாரைகள் மூடப்படும் போது ஏனையோர் மதஸ்தலங்களை உடைத்து எதனை இவர்கள் சாதிக்கப்போகிறார்கள்?
தங்கள் மதம் ஏனையோரிடம் செல்ல தாமே தடையாகவும் இருந்து,தங்கள் செயற்பாட்டால் தங்கள் மதத்தையும் நலிவடையச் செய்து கொண்டிருக்கும் இவ்வாறானவர்களை பெளத்த மக்களே இனம் கண்டு இவர்களினது செயற்பாடுகளை தடுக்க முனையா விட்டால்,எதிர் கால பெளத்த மதமே இலங்கையில் கேள்விக்குறியாக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

Related

Articles 6736297467890239298

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item