ருஹூணு பல்கலைக்கழக விரிவிரையாளர் பிணையில் விடுதலை
https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_859.html
குற்றச் செயல் புரியும் நோக்குடன் இரவு வேளையில் வீடொன்றினுள் புகுந்த ருஹூணு பல்கலைக்கழகத்தின் சமூக வி்ஞ்ஞான கற்கை நெறிக்கான விரிவிரையாளர் பத்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை தலைமை நீதவானும் மற்றும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய ருவன் சிசிரகுமார முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விரிவுரையாளரின் வெளிநாட்டு கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.
விரிவுரையாளர் வெளிநாட்டிற்கு செல்வதை தடுப்பதற்கான கடிதத்தை உடனடியாக குடியவரவு குடியகழ்வு முகாமையாளருக்கு அனுப்புமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை டிசெம்பர் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.