அளுத்கம அசம்பாவிதம் பற்றி விசாரணை நடாத்துங்கள் - பொது பல சேனா பல்டி

https://newsweligama.blogspot.com/2015/01/blog-post_51.html
அளுத்கமை சம்பவம் சம்பந்தமாக பொது பல சேனா மீது குற்றச்சாட்டு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சி மாற்றத்தால் குலை நடுங்கிப் போயுள்ள ஞானசார அச்சம்பவத்திற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மஹிந்த தமக்கு எவ்வகையிலும் உதவவில்லை எனவும் மஹிந்தவின் தோல்விக்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை எனவு இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மா நாட்டில் கதை அளந்துள்ளார் ஞானசார.
தற்பொழுது வெளி நாடுகளில் இருக்கும் குழுக்கள் மூலம் தமக்கு தொலைபேசியூடாக அச்சுருத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.