முஸ்லிம் இலக்கியப் பிரகடனத்திற்கான ஒன்றுகூடல்! (படங்கள் இணைப்பு)
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_20.html
இன்று (21) வியாழக்கிழமை அமைச்சர் பஷீர் சேகு தாவூத் அவர்களின் பத்தரமுல்லை, செத்சிரிபாயவிலுள்ள உற்பத்தித் திறன் அமைச்சில் பிற்பகல் 4.30 மணிக்கு இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றது.
“முஸ்லிம் இலக்கியப் பிரகடனம்” எனும் தொனிப் பொருளிலான அவ் ஒன்றுகூடலில் கலந்துகொண்டோர் முஸ்லிம் இலக்கியத்தின் தேவைப்பாடு பற்றி பல்வேறு கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
அடுத்துவரும் ஒன்றுகூடல்கள் வவுனியா, கிண்ணியா மற்றும் வெலிகமவில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் அமைச்சர் சேகு தாவூத், நவாஸ் சௌபி, கலைமகன் பைரூஸ், சுஐப் எம். காஸிம், எம்.சீ. நஜிமுதீன், தினக்குரல் நிளாம், முல்லை முஸ்ரிபா, மபாஹிர் மௌலானா, அஷ்ரப் ஏ. அஸீஸ், அல்ஹாஜ் மக்கீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(கேஎப் - படங்கள் அஷ்ரப் ஏ. அஸீஸ்)